January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

குண்டு பாகற்காய் சீசன் துவக்கம்

மதுரை, மே 8

மதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை, அப்பன் திருப்பதி, அலங்காநல்லூர், மேலூர், வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய் பகுதிகளில் மானாவாரியாக குண்டு பாகற்காய் பயிரிடப்பட்டது. அவை நன்றாக விளைந்து தற்போது அறுவடை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மருத்துவ குணம் நிறைந்த இந்த பாகற்காய் முழுக்க முழுக்க கசப்பு தன்மையானது. வயிற்றில் உள்ள கிருமிகளை கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு தன்மை நிறைந்தது. நல்ல விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Spread the love