கன்னியாகுமரி, ஜூன் 16
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தற்போது சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சந்திரசேகர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பயிர்க்கடன் ரூ.400 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதில் ரூ.395 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.440 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள விவசாயிகள் அனைவரும் கடனுதவி பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் நகைக்கடன் கறவை மாடுகள் உள்பட அனைத்து வகையான கடன்களுக்கும் ரூ.2200 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 300 டன் யூரியா உரம் இருப்பில் உள்ளது. வருகிற 20-ந் தேதி மேலும் 600 டன் யூரியா உரம் கொண்டுவரப்படவுள்ளது. தேவைப்படுபவர்களுக்கு யூரியா உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பெற்றுக்கொண்டார்.
Spread the love