August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

குருவிச்சிப்பூண்டு

குருவிச்சிப்பூண்டு தமிழகப் புதர்க் காடுகளிலும், வேலிகளிலும் வளரும் சிறு செடி இனம். சொரசொரப்பான கரும்பச்சை நிறம் உள்ள சிறு இலைகளை உடையது. செடி முழுமையும் மருத்துவ பயன் உடையது. உடல் தேற்றுதல், சதை நரம்புகளை சுருங்கச் செய்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது. சமூகத்தை அதாவது செடி முழுமையும் உலர்த்தி பொடித்து ஒரு கிராம் அளவாக சர்க்கரையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர, சீத கழிச்சல், குருதி கழிச்சல், மலடு தொழுநோய் கரப்பான் முதலிய நோய்கள் தீரும். வேரை உலர்த்தி பொடித்து ஒரு கிராம் அளவாக காலை, மாலை வெந்நீரில் கொடுத்து வர தொழுநோய், பெண் மலடு, தோல் நோய்கள் ஆகியவை தீரும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love