June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

குரூசர் பைக்காக மாறியது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கலக்கலான கஸ்டமைசேஷன்

இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளை மாடிஃபிகேசன் செய்து குரூசர் ரக பைக்காக மாற்றியுள்ளது ஒரு மாடிஃபிகேசன் நிறுவனம்.

குரூசர் ரக பைக் போல தோற்றமளிக்கும் இந்தப் பைக்கிற்கு வடேர் என அந்த நிறுவனம் பெயரிட்டுள்ளது. பெட்ரோல் டேங்கின் உயரம் அதிகரிக்கப்பட்டு குரூசர் ரக தோற்றம் தரப்பட்டுள்ளது.

ஸ்பிளிட் சீட் அமைப்புடன் என்ஜின் அமைப்பும், பைக்கின் பெண்டர்களும் கருப்பு நிறத்தில் உள்ளது. ஓட்டுனரின் கால்களைப் பாதுகாக்கும் விதத்தில் பெரிய அளவில் ஃபுட்ரெஸ்ட் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பைக்கின் ஸ்போக் சக்கரங்களில் அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கருப்பு நிறத்தில் இருக்க, முன்பக்க சஸ்பென்ஷன் சில்வர் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. முரட்டுத் தோற்றமளிக்கும் வயைில் ஸ்டாக் இண்டிகேட்டர்களுக்கு மாற்றாக புல்லட் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு ஏற்ற விதத்தில் கஸ்டம் எக்ஸாஸ்ட் குழாய் இந்தப் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

கிளாசிக் 350 பைக்கில் 349சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

Spread the love