குறட்டை அல்லது சவுரிக்கொடி, இது தமிழகம் எங்கும் வேலிகளில் வளரக்கூடிய கொடி வகை. 10 மீட்டர் நீளம், ஒரே கொடியாக வளரும் தன்மை. அது சவுரி கொடி என்றும் அழைப்பதுண்டு. இதன் பழம் உடல் தேற்றும், வேர் மலமிளக்கும். பழத்தை பொடியாய் அறிந்து தேங்காய் எண்ணெயில் பதமுறக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு இரண்டு அல்லது மூன்று துளி காதில் விட்டு வர காது வலி, காது புண் ஆகியவை தீரும். மூக்கில் விட்டு வர நாசிப்புண் ஆறும். பழத்தை உலர்த்தி பொடித்து பீடி போல் புகைக்க சளியை இழக செய்து இரைப்பிருமல் குணப்படும். பழத்தை பொடியாய் அறிந்து நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைமுழுகி வர தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஆகியவை தீரும். வேரை உலர்த்தி புடித்து பத்து கிராம் அளவு அரை லிட்டர் நீரிலிட்டு 125 மில்லியாக காய்க்கு வடிகட்டி 30 மில்லி அளவாக காலை, மாலை கொடுத்து வர வெள்ளை குணமாகும்.
குறட்டை அல்லது சவுரிக்கொடி

Spread the love