August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

குறுவை நெல் சாகுபடியில் நாற்றங் காலில் ஏற்படும் நோய் தாக்குதல் மற்றும் மேலாண் முறைகள்

நெற்பயிர்களில் நாற்றங்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல், சத்து பற்றாக்குறை மற்றும் கலைகளின் தாக்கம் ஆகியவை ஆகும். அதுவே அதிக மகசூலை குறைக்கும். நெற்பயிர்களில் நாற்றங்காலில் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளும், கண்டறியும் முறைகள் மற்றும் அதனின் மேலாண்மை முறைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

  1. இலைப்புள்ளி நோய்
    அறிகுறிகள் :
    · முதலில் இந்நோய் மிகச்சிறிய பழுப்புப் புள்ளிகளாகத் தோன்றும். பின் உருளை (அ) முட்டை வடிவமாக இருந்து வட்ட வடிவப் புள்ளிகளாக மாறிவிடும்.
    · இந்நோய் பழுப்பு நிறப்புள்ளிகளுடன் கதிர் மற்றும் கழுத்துப் பகுதியை தாக்கும்.
    · விதைகளும் தாக்கப்படுகின்றன. (விதை உறையின் மேலுள்ள புள்ளிகள் கருப்பு அல்லது பழுப்பு நிறப்புள்ளிகளாக இருக்கும்). இவை மென் பட்டுத் துணி போன்று காணப்படும்.
    · நாற்றுக்கள் மடிந்தும் நோய் தாக்கப்பட்ட நாற்றங்கால் சற்று தொலைவிலிருந்து பார்க்கும் போது பழுப்பு நிற துரு ஏறிய பயிர்கள் போன்றும் காட்சியளிக்கும்.
    · விதை உறையில் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
    · விதை முளைப்பு திறன் பாதிக்கப்படுவதோடு நாற்றுக்கள் மடிந்து விடும். தானியத் தரம் மற்றும் அதன் எடையும் குறைகிறது.
    · தீவிர நோய் தாக்குதலின் போது 50% மகசூல் குறைவு ஏற்படுகிறது.

சாதகமான சூழ்நிலை :
தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து குறைபாடு கொண்ட நடவு வயலில் இந்நோயின் தீவிரம் சற்று அதிகமிருக்கும். நோய்க்கு அதிக சாதகமான காலநிலை நிலவும் போது 90 சதம் மகசூல் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நோய் பரவும் முறைகள் மற்றும் ஏதுவான தட்பவெப்ப நிலை:
· நோயால் பாதிக்கப்பட்ட விதைகள் மூலம் பரவும் நெற்பயிர் குடும்பத்தை சார்ந்த மற்ற களைசெடிகள் மீது இப்பூசணங்கள் உயிர் வாழ்கின்றன. விதைகளில் 4 வருடங்களுக்கு மேல் வாழக் கூடியவை. நோய் தாக்கப்பட்ட விதைகள், தன்னிச்சையாய் வளர்ந்த நெற்பயிர், நோய் தாக்கப்பட்ட நெற்பயிர், சிலகளைச் செடிகள் வயலில் நோய் பரவுவதற்கான முக்கிய மூலங்கள். காற்று வழியாக நோயக் காரணி பரவுகிறது.
· ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள மண்ணிலும், நீர் தேங்காத மண்ணிலும் இந்நோய் தாக்குதல் இருக்கும். ஆனால் நெற்பயிரை எளிதில் தாக்காது.
· ஊட்டச்சத்து தனிமங்கள் பற்றாக்குறை இருக்கும் மண் அல்லது நஞ்சுப் பொருள்கள் தேக்கம் உள்ள மண்ணிலும் இந்நோய் பரவும்.

மேலாண்மை முறைகள்:
· வயல் மற்றும் வரப்புகளை களையின்றி வைத்திருப்பதால் நோயின் தாக்குதலைக் குறைக்கலாம்.
· நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட இரகங்களான ஏடீடி 44, பீஒய் 4, கோஆர்ஹச் 1, கோ 44, காவேரி பவானி, டிபிஎஸ் 4 மற்றும் தனு ஆகியவற்றை பயிரிடுதல்.
· நோயற்ற விதைகளைத் தேர்வு செய்து நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
· பயிர் வளர்ச்சிக்கேற்ற முறையான ஊட்டச்சத்துக்களை அளித்தல் மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
· கேப்டன் அல்லது திரம் @ 2.0 கிராம்/கிலோ விதையுடன் விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.
· சூடோமோனாஸ் / புளோரசன்ஸை 10 கிராம்/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து 2.5 கிலோ /எக்டர் என்றளவில் 100 லிட்டர் நீருடன் கலந்து 30 நிமிடங்கள் நாற்றுக்களை நனைத்து பின் நட வேண்டும்.

  1. துங்ரோ நச்சுயிரி நோய்
    அறிகுறிகள் :
    · துங்ரோ நோய் உருண்டை வடிவ நச்சுயிரி மற்றும் நீண்ட சதுர நச்சுயிரி ஆகிய இரு வித நச்சுயிரிகளால் உண்டாகிறது. இவ்விரு நச்சுயிரிகளும் சேர்ந்து நோய் உண்டாக்கினால் நோயின் தீவிரம் அதிகமாகும். இந்நோய் நெற் பயிரின் எல்லா பருவத்திலும் தாக்கினாலும் இளம் பயிரை அதிகம் தாக்கும்.
    · இந்நோய் தாக்கப்பட்ட செடிகள் அளவில் சிறுத்து வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறம் வரையிலான பல்வேறு நிறங்களில் காணப்படும். இலைகள் நிற மாறுதலும் இலையில் துரு பிடித்தது போன்ற கொப்புளங்களும் இலை நுனியிலிருந்து கீழ் நோக்கி பரவும்.
    · நுனி இலைகள் வெளிப்பக்கமாக சிறிது சுருண்டு காணப்படும். இளம் இலைகள் உருமாறி திருகிக் கொண்டு இருக்கும்.குருத்து இலைக்கு அடுத்துள்ள இளம் இலைகளில் தேமல் போன்ற வெளிறிய திட்டுக்கள் தென்படும். புதிய இலைகளில் மஞசள் புள்ளிகள் அல்லது வெளிறிய நிறக் கோடுகள் காணப்படும்.
    · முதிர்ந்த இலைகள் துரு பிடித்தது போன்ற நிறத்தை அடைகின்றன. ஓரளவு நோய் சகிப்புத் தன்மை கொண்ட இரகங்களில் நச்சுயிரின் தாக்குதல் பூப்பதை தாமதப்படுத்துகிறது.நெற்பயிரின் இளம் பருவத்தில் இந்நோய் தாக்கினால் கதிர்கள் வராது அல்லது வெளிவரத் தாமதமாகும்.
    · கதிர்களில் மணிப்பிடிப்பு இல்லாமலோ அல்லது மிகக்குறைந்த மணிகளுடனோ காணப்படும். மணிகளின் எடை மிகவும் குறைவாக இருக்கம். நோய் சகிப்புத் தன்மை அறவே அற்ற இரகங்களின் ஆரம்ப காலத்தில் ஏற்படும் தாக்குதல் பயிரின் பூக்கும் பருவத்திற்கு முன்பே அவற்றை இறக்கச் செய்கிறது.

நோய் பரவும் முறைகள் :
· துங்ரோ நச்சுயிரி நோய் நெஃபோடெட்டிக்ஸ்வைரசென்ஸ் என்ற பச்சைத்தத்துப் பூச்சி மூலம் பரவுகிறது.
· இதைத் தவிர நெ.நைக்ரோபிக்டஸ், நெ.மலேயான்ஸ், ரெசீலியாடார்சாலிஸ் போன்ற தத்துப் பூச்சிகளும் இந்நோயினைப் பரப்பக் கூடியன.இந்நோயை பச்சைத்தத்துப் பூச்சிகள் மட்டுமே பரப்ப முடியும். ஒரு பச்சை தத்துப்பூச்சி ஒரு நாளில் 40 செடிகளுக்கு நோயினை பரப்பவல்லது.

மேலாண்மை முறைகள்:
· பச்சைத் தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 8 சென்ட் நாற்றங்காலுக்கு கார்போபியூரான் குருணை மருந்தினை 1.4 கிலோ வீதம் இடவேண்டும்.
· நடவு வயலில் குருத்துக்கு 2 பச்சைத் தத்துப் பூச்சிகள் தென்பட்டால் எக்டேருக்கு மோனோகுரோட்டோபாஸ் 1000 மி.லி. அல்லது பென்தியான் 500 மி.லி. மருந்தினை தெளிக்க வேண்டும்.
· நாற்றாங்காலை விளக்குக் கம்பம் அருகில் அமைக்கக் கூடாது.
· நோய் தாக்கப்பட்ட பயிருக்கு அருகில் நாற்றங்கால் அமைக்கக் கூடாது.
· வயல், வரப்புகளில் களைகள் இல்லாதவாறு சுத்தமாக வைத்திருக்கவும்.
· அறுவடை செய்தவுடன், உழுது, அடிக்கட்டை களை எடுத்து எரித்து விட வேண்டும்
· சூடோமோனாஸ் கொண்டு ஈர விதை நேர்த்தி செய்யலாம். 60 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் சூடோமோனாஸ் தூளை நன்கு கலக்கி 60 கிலோ விதையை இக்கலவையில் 24 மணி நேரம் ஊற வைத்த பின் முளை கட்டி நாற்றங்காலில் விதைக்கலாம்.
· நாற்றங்காலில் நோயை பரப்பு ம்பச்சைத்தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் குருணையை 8 சென்ட் நாற்றங்காலுக்கு 1400 கிராம் என்ற அளவில் விதைத்த 10ம் நாள் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 22 மி.லி. மருந்தை 16 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 10, 20ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.
· நடவு வயலில் ஒரு குத்துக்கு ஒரு பச்சை தத்துப் பூச்சி என்றளவில் காணப்பட்டால், மோனோகுரோட்டோபாஸ் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நட்ட 15 மற்றும் 30வது நாளில் தெளிக்கவும்.
o மோனோகுரோட்டோபாஸ் (86 டபிள்யூஎஸ்சி) – 400 மி.லி.
o பென்தியான் (100 இசி) – 200 மி.லி.

  1. குலை நோய்
    அறிகுறிகள் :
    · பயிரின் அனைத்து பகுதிகளும் (இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப்பகுதி, கதிர்) பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும்.
    · இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண்வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.
    · தீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். இதையே “குலைநோய்” என்கிறோம். கதிர் வெளி வந்தவுடன் பயிர்கள் சாய்ந்து விடும்.
    · கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர்மணிகள் சுருங்கியும்/பகுதி நிறைந்தும், கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டிருக்கும். இதை “கழுத்து குலைநோய்” என்கிறோம்.
    · கணுக்கள் கருப்பு நிறமாகமாறி, உடைந்துவிடும். இதை “கணுகுலைநோய்” என்கிறோம்.
    · பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுவதால், வெண்கதிர்அறிகுறிதோன்றும்.
    · கதிர்ப் பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால் கதிர்ப் பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும், குறைந்த தரத்துடன் காணப்படும். கதிர் மற்றும் கதிர்க் கிளைகளில் உள்ள புள்ளிகள் பழுப்பு நிறமாக (அ) அடர் பழுப்பு நிறமாக இருக்கும். நெல் இரகங்களைப் பொருத்து, புள்ளிகளின் அளவும், வடிவமும் வேறுபடும்.

சாதகமான சூழ்நிலை :
· வருடம் முழுவதும் குலை நோய் பூசண வித்துக்கள் காற்றில் இருக்கும்.
· நெல் வளரும் மேட்டுப் பாங்கான இடங்களின் சுற்றுப்புற அமைப்பு மற்றும் வெட்ப மண்டல பகுதிகள்.
· மேக மூட்டமுள்ள வானம், தொடர் மழை மற்றும் துாரல்கள்.
· அதிக அளவில் பயன்படுத்தப்படும் அம்மோனியம் சல்பேட் போன்ற தழைச்சத்து உரங்கள்.
· காற்றின் ஈரப்பதம் (90 சதவிகிதம் மற்றும் அதற்கும் அதிகம்) மற்றும் ஈரமான இலைகள்.
· வெப்ப நிலை 25-28°C

மேலாண்மை முறைகள் :
· நோயற்ற பயிரிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
· வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும்.
· நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களான ஆடுதுறை 36, ஐ.ஆர்.20 மற்றும்கோ 47 ஆகியவற்றைப் பயிர் செய்தல்.
· கேப்டன்/கார்பன்டசிம்/திரம்/டிரைசைகலசோல் ஆகிய ஏதோ ஒன்றோடு 2.0 கிராம்/கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
· நாற்றங்கால் பருவம் : குறைந்த தாக்குதல் இருப்பின் கார்பன்டசீம் (அ) எடிஃபென்டாஸ் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
· துார் வைக்கும் முன் நிலை முதல் துார் வைத்தலின் மத்திய நிலை வரை : குறைந்த தாக்குதலாக (2-5% நோய் தீவிரம்) இருந்தால், கார்பன்டசீம் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் காணப்பட்டால் தழைச்சத்து உரம் அளித்தலை தாமதமாக செய்ய வேண்டும்.
· சூடோமோனாஸ் துகள் கலவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் 400 மி.லி. தண்ணீரில் கலந்து விதைப்பதால் குலை நோய் தாக்குதல் குறைகின்றது.
· ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது கார்பென்டாசிம் 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்தல்.
· வயலில் நோய் தோன்றும் போது செடிகளுக்கு எக்டேருக்கு எடிபென்பாஸ் 500 மி.லி. அல்லது மேன்கோசெப் 1 கிலோ அல்லது கிட்டாசின் 250 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 400 கிராம் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
· புழுதி நாற்றங்கால் களை தவிர்க்க வேண்டும்.
· சூடோமோனாஸ்/புளோரோசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். (10 கிராம்/கிலோ விதை)
· 25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனஸ்/புளோரோசன்ஸ் பொடியைத் துாவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
· நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ்/புளோரோசன்ஸ் பொடியை 0.5% என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

கண் வடிவ புள்ளிகள் இலைகளில் காணப்படும்

கணு குலை நோய்

கழுத்து குலை நோய்
காணப்படும்

மேலும் விவரங்களுக்கு, ரா.சுசித், இளங்கலை வேளாண் மாணவர், கு.ராமலிங்கம் மற்றும் ஆ.நிவேதா, உதவி பேராசிரியர்கள், பயிர் நோயியல் துறை, ஆர்.வி.எஸ்.வேளாண்மை கல்லூரி, தஞ்சாவூர்.

Spread the love