August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

குறைந்த செலவில் கால்நடை தீவனம் தயாரித்தல் பயிற்சி

புதுக்கோட்டை, ஜூன் 29

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரம், காரக்கோட்டை கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டத்தின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2022-23 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் தொடங்கி வைத்தார். பயிற்சியில் அட்மா சேர்மன் முத்துச்சாமி, தலைமை வகித்தார் மற்றும் காரக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் சத்தியகலா உதயகுமார், உறுப்பினர் சுதா மருதுபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் கால்நடை மருத்துவர் முனைவர் சிலம்பரம், கறவை மாடுகளுக்கு தீவனம் தயாரிக்கும் முறைகள் மற்றும் வளர்ப்பு முறைகள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

கறவை மாடு வளர்ப்பதற்கு கால்நடைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி கூறினார். கால்நடை தீவனங்கள் வளர்ப்பு, கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டிய சரிவிகித தீவன முறைகள், தாது உப்புக்கலவை, பால் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள், நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள், மருந்துகள், குடற்புழு நீக்கும் முறைகள், சினை ஊசி போடும் கால இடைவெளிகள் பற்றி கூறினார்.

கன்றுக்குட்டி பராமரிப்பு, கன்று முதல் ஈத்து வரையிலான தடுப்பூசி கால இடைவெளிகள் பற்றி கூறினார். செயற்கை கருவூட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் தீவன புல் இரகங்கள் வளர்ப்பு முறைகள் பற்றி கூறினார். பயிற்சியின் முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் நன்றி உரை கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் கவியரசி மற்றும் பஞ்சாயத்து கிளார்க் ஆகியோர் செய்தனர்.


Spread the love