நாமக்கல், மார்ச் 30
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், சிங்களாந்தபுரம் கிராமத்தில் நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் எளிய முறையில் ஜீவாமிர்தம் தயாரிப்பு பற்றி விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர். ஜீவாமிர்தம் தயாரிப்பதற்கு சாணம், கோமியம், நாட்டுச் சர்க்கரை, வயல் மண் மற்றும் அரிசி ஆகியவை பயன்படுத்தப்படும் எனவும் அதன் செயல்முறை விளக்கத்தை அளித்தனர். ஜீவாமிர்தம் என்பது இயற்கை முறையில் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை மற்றும் மண் வளத்தை அதிகப்படுத்தும், பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும், சுற்றுப்புறத்தை பாதிக்காத வண்ணம் நிலத்தை சீர்படுத்தும் எனவும் மாணவிகள் ஜீவாமிர்தத்தின் நன்மைகளை விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.
Spread the love