June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

குறைந்த செலவில் தீவனம் தயாரிக்கும் முறைகள்

கிருஷ்ணகிரி, ஜூன் 10

கிருஷ்ணகிரி வட்டாரம்; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம் (அட்மா2022-23- ம் ஆண்டிற்கான கலைஞர் அவர்களின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் (முயுஏஐயுனுP) தேர்ந்தேடுக்கப்பட்ட வெலகலஅள்ளி கிராமத்தில் கால்நடைகளின் தீவன மேலாண்மை – குறைந்த செலவில் தீவனம் தயாரிக்கும் முறைகள் தொழில்நுட்ப விளக்க பயிற்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏ.சுரேஷ்குமார், வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணகிரி, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் அதன் செயல்பாடுகள், கால்நடைகளின் தீவன மேலாண்மை – குறைந்த செலவில் தீவன தயாரிக்கும் முறைகள் கறவையின் உற்பத்திக்கு கலப்பு தீவனம்,உலர் தீவனம் உறுகாய் புல் தாயரிக்கும் தொழில்நுட்பங்களையும் அதன் முக்கியதுவம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பிரபாவதி, கால்நடை மருத்துவர், கால்நடைகளுக்கு தேவையான நல்ல தரமான தீவனங்கள், புண்ணாக்கு போன்ற புரதச் சத்துள்ள கலப்பு தீவனம், கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் தானிய வகைகளை அரைத்து கொடுக்கும் முறைகள் பற்றியும் அதன் பயன்களை விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். ச.எலிசபெத் மேரி, வேளாண்மை அலுவலர், கிருஷ்ணகிரி, உழவர் நலத்தறையில் செயல்படுத்தபடும் திட்டங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் ஆ.முத்துசாமி, தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் குறித்து விளக்கினார். இப்பயிற்சிக்கு உதவி தொழில்நுட்ப மேலாளர், சண்முகம், பார்வதி ஏற்பாடு செய்திருந்தனர், இதில் 50-க்கும் மெற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Spread the love