June 20, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்போன் மிவி அறிமுகம்

சென்னை, ஏப்.27

மிவி தனது புதிய வயர்லெஸ் இயர்போன்கள் ஆனது காலர் கிளாசிக் என அறிமுகம் செய்துள்ளது. இந்த கிளாசிக் வயர்லெஸ் இயர்போன்களானது ரூ.999 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது 24 மணிநேர ப்ளே டைம் ஆதரவு மற்றும் சிறந்த கட்டமைப்பு அம்சத்தோடு வருகிறது.

காலர் கிளாசிக் தடையற்ற இணைப்பிற்காக ப்ளூடூத் 5.0 உடன் தெளிவான அழைப்பு அனுபவத்திற்கான வலுவான எம்இஎம்எஸ் மைக்கை கொண்டிருக்கிறது. அதேபோல் நீண்ட பயன்பாட்டிற்கு குறைந்த எடை அனுபவத்தோடு வருகிறது. இசையை கட்டுப்படுத்த இன்-லைன் 3 பட்டன் ரிமோட்டைக் கொண்டிருக்கிறது. தொலைபேசியை தொடாமல் அழைப்புகளை எடுக்கலாம், இடைநிறுத்தலாம், அழைப்புகளை நிராகரிக்கும் அம்சத்தோடு வந்துள்ளது இந்த சாதனம்.

மிவி சாதனத்தின் 10 நிமிட சார்ஜிங் 10 மணிநேர பின்னணி ப்ளே நேரத்தை வழங்குகிறது. வயர்லெஸ் இயர்போன்கள் ஐபிஎக்ஸ் 5 என மதிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த சாதனம் நீர் மற்றும் வியர்வை ரெசிஸ்டெண்ட் அம்சத்தோடு வருகிறது.

மிவி இயர்போன்கள் ஆழமான மற்றும் சக்திவாய்ந்த பேஸ் அம்சத்தோடு வருகிறது. இது இந்தியாவில் ஆடியோ ஃபில் விருப்பத்தோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிவி காலர் கிளாசிக் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே சிறப்பு அறிமுக விலையில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Spread the love