சேலம், மார்ச் 11
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரம், சந்தியூரில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி கருத்தருங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்டம் விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள் மோகன பிரியா செ, ரூப ஸ்ரீ பி, சாய் சுரேகா மு, சம்யுக்தா பெ ஜெ ஆகியோர் குழித்தட்டில் நாற்றாங்கால் வளர்க்கும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். இதில் சேலம் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பங்குபெற்று பயன் அடைந்தனர்.
Spread the love