August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கூடுதலாக 10,000 பேரை பணியமர்த்த அமேசான் நிறுவனம் திட்டம்

லண்டன், மே 15

முன்னனி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்.காம் இன்க் மேலும் 10,000 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: அமேசான் நிறுவனம் பிரிட்டனில் அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, தொடர்ந்து அங்கு பணியமர்த்தலை தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் பிரிட்டனில் மேலும் 10,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமேசானின் இந்த வேலை வாய்ப்பானது லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க், கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பகுதிகளில் அலுவலகங்களில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதே போல பணியமர்த்தப்படும் ஊழியர்கள் அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் செயல்பாட்டு பிரிவில் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் தனது வணிகத்தினை செய்து வரும் அமேசான் தொடர்ந்து இங்கும் விரிவாக்கம் செய்து வருகின்றது. அதிலும் தற்போது இந்தியாவில் கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டும் இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான தேவையானது கூடும் என்றும், இதனால் அமேசானின் விற்பனையும் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற நாடுகளை விடவும் இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ள நிலையில், இந்தியாவிலும் இந்த விரிவாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love