October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கூட்டுப்பண்ணைய விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விருதுநகர், அக்.11

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரம், கவுண்டம்பட்டி கிராமத்தில் உழவர் ஆர்வலர் குழுவிற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சிவகாசி வேளாண்மை உதவி இயக்குனர் ஜா.ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது.

சிவகாசி வட்டாரத்தில் விரிவாக்க சீரமைப்புத்திட்டதின் கீழ் நடப்பு ஆண்டு கூட்டுப்பண்ணையம் திட்த்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட உழவர் ஆர்வலர் குழு-1
விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையம் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியில் வெம்பக்கோட்டை வட்டாரம வைப்பார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முக்கியத்துவம், அரசு மானியங்கள் பெற வழிமுறகைள், குழு பதிவேடுகள் பராமரிக்கும் முறைகள் மற்றம் குழு விவசாயிகள் அரசு நிதி பெற என்னென்ன வழிமுறைகள், விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். சிவகாசி வட்டார துணை வேளாண்மை அலுவலர் ச.சீனிவாசன், நடப்பு ஆண்டு சிவகாசி வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் அரசு மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.

இப்பயிற்சியில் மக்காச்சோள படைப்புழு தாக்குதல் மேலாண்மை குறித்த தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை சிவகாசி வட்டார விரிவாக்க சீரமைப்பு திட் அலுவலர்கள் ம.நாராயணன் மற்றும் த.மாரிமுத்து மற்றும் உதவி வேளாண்மை அலவலர் மனோன்மணி ஆகியோர் செய்திருந்தார்கள்.

Spread the love