August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கேஐஎம்எஸ் ஹாஸ்பிட்டல்ஸ் ஐபிஓ செபி அனுமதி அளித்தது

புது தில்லி, மே 6

புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிறுவனம் கடந்த பிப்ரவரியில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், இப்போது செபியிடமிருந்து அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, ரூ.700 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதில், ரூ.200 கோடிக்கு புதிய பங்குகளையும், பங்குதாரர்களின், 2.13 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, குறிப்பிட்ட அளவிலான பங்குகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, நிறுவனத்தின் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் கடனை அடைக்கவுள்ளது.

மேலும், இந்நிறுவனம் ஆந்திரா,தெலுங்கானாவில் மிகபெரிய, சுகாதார துறை சார்ந்த குழுமமாகும். இந்நிறுவனம், கேஐஎம்எஸ் ஹாஸ்பிட்டல்ஸ் எனும் பிராண்டில், 9 பல்நோக்கு மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. இவற்றில் மொத்தம், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் இருக்கின்றன.

Spread the love