September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கேமிங் துறையில் களமிறங்க நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் திட்டம்

மும்பை, ஜூலை 22

பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பொழுதுபோக்கு மட்டுமின்றி கேமிங் துறையிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றாக இருக்கும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம், விரைவில் கேமிங் சந்தையில் களமிறங்க இருக்கிறது. 2021 இரண்டாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கை வெளியீட்டின் போது நெட்ப்ளிக்ஸ் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது.

நெட்ப்ளிக்ஸ் கேமிங் சேவைக்கான சந்தா, பயனர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்திலேயே சேர்க்கப்பட்டுவிடும். இதனால் எவ்விதமான கூடுதல் கட்டணமும் இன்றி பயனர்கள் நெட்ப்ளிக்ஸ் கேமிங் சேவையை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தலாம்.

மேலும், வருவாய் அறிக்கையின்படி நெட்ப்ளிப்க்ஸ் நிறுவனம் 7.3 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 19 சதம் அதிகம் ஆகும். தற்போது நெட்ப்ளிக்ஸ் சேவையை 20.9 கோடி பயனர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். இது சரசாரி கட்டண வருவாயில் 11 சதமும், ஒரு சந்தாதாரரின் வருவாயில் 8 சதமும் அதிகம் ஆகும்.

Spread the love