January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கேலக்ஸி எஃப்52 5ஜி ஸ்மார்ட்போன் விலை என்னவாக இருக்கும் ?

கேலக்ஸி எஃப்52 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிடவுள்ளது சாம்சங் நிறுவனம்.

இந்த நிலையில், அந்த மொபைல் தொடர்பான அம்சங்கள் மற்றும் உத்தேச விலை விவரங்கள் டிப்ஸ்டர் தகவல் வாயிலாக வெளிவந்துள்ளது.

அதன்படி சாம்சங் கேலக்ஸி எஃப்52 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.22,900 ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி புராஸசருடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும். அத்துடன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியைக் கொண்டிருக்கும். அத்துடன் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டும் தரப்பட்டுள்ளது.

டிப்ஸ்டர் தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி ஸ்மார்ட்போன் மேல் வலது மூலையில் பஞ்ச்ேஹால் கட்அவுட் வடிவமைப்போடு வரும் எனவும், இதன் பின்புறத்தில் செவ்வக கேமரா வடிவமைப்போடு குவாட் ரியர் கேமரா அமைப்பு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்றும், அத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love