புதிய கேலக்ஸி எஃப்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த மொபைல் தொடர்பான அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் தெளிவு, 1,08 0x2,408 பிக்சல் துல்லியம் கொண்ட டிஎஃப்டி டிஸ்பிளே உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பதுகாப்பைப் பெற்றுள்ளது.
இந்த மொபைலில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது. மெமரி நீட்டிப்புக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் தரப்பட்டுள்ளது.
இந்த மொபைலானது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் புராசஸருடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும்.
பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் உள்ளன. முன்புறம் 13எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது.
4350 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதற்கு 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி தரப்பட்டுள்ளது. இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.
புதிய கேலக்ஸி எஃப் 52 மொபைலானது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூஎஸ்பி டைப்-சி, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டி வசதிகளைப் பெற்றிருக்கும்.