August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்தது சாம்சங்

புதிய கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.

விரைவில் இதர சந்தைகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் 6.6-இன்ச், ஃபுல் எச்டி பிளஸ் தெளிவு, 1080 x 2408பிக்சல் துல்லியம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் புராஸசர் உடன் அட்ரினோ 619ஜிபியு வசதியும் உள்ளது. அத்துடன் டீne UI 3.1சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும்.

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது. அத்துடன் மெமரி கார்டு ஸ்லாட் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது.

இந்த மொபைலில் 4500எம்ஏஎச் பேட்டரி 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இடம்பெற்றுள்ளது. கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

டஸ்கி பிளாக் மற்றும் மேஜிக் ஒயிட் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.26,500-ஆக இருக்கிறது.

Spread the love