சிவகங்கை, ஜூன் 17
சிவகங்கை மாவட்டத்தில் கேழ்வரகு பயிரில் சில இடங்களில் குலைநோய் தாக்குதல் காணப்படுகிறது. நாற்றங்காலால் முதல் கதிர் முற்றம் வரை இதன் தாக்குதல் தென்படும்.
அறிகுறிகள்:
சிறிய பழுப்பு நிற வட்ட புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவி இலை முற்றிலும் காய்ந்துவிடும். இலையில் கண் வடிவபுள்ளிகள் காணப்படும். கதிர் பருவத்தில் கதிர் சுருங்கி கருப்பு நிறமாக மாறும். இதனால் கதிர் பதராக மாறிவிடும். பெருமளவு மகசூல் இழப்ப ஏற்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
· சூடோமோனாஸ் விதை நேர்த்தி செய்து நோயற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.
· முறையா பயிர் 30 +10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
· சூடோமோனாஸ்ஒருலிட்டருக்கு 2 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். 15 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
· நாற்றாங்காலில் விதைத்த 10 நாளில் கார்பன்டை தெளிக்க வேண்டும். மீண்டும் 20-25 நாள், 40-45 நாளில் தெளிக்க வேண்டும்.