நேற்றைய தொடர்ச்சி
கொண்டைக்கடலை பச்சை செடியை கொதி நீரில் இட்டு வெளிப்படும் ஆவியில் உட்கார்ந்து இருக்க சூதகவலி, சூதகச் சிக்கலால் ஏற்படும் இடுப்பு வலி தீரும். இளம் கடலை பறித்து மென்மையாய் அரைத்து மோரில் கலந்து கொடுக்க சீத கழிச்சல் தீரும். கடலை காடி ஒரு தேக்கரண்டி சம அளவு நீரில் கலந்து சாப்பிட உடல் வெப்பம் மாறும், பித்தம் உடனே சமணப்படுத்தும். பசி மிகுக்கும். 250 மில்லி கடலை கார்டியுடன் 600 கிராம் வெள்ளை சர்க்கரை சேர்த்து தேன் பதமாக காய்ச்சி ஒரு பிடி புதினா இலையை போட்டு வைத்துக்கொண்டு பத்து மில்லியில் இருந்து 50 மில்லி நீர் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம், வாந்தி தீரும். கடலை செடியில் கால் முதிரும் தருவாயில் நல்ல மூடுபனி காலத்தில் மெல்லிய துணியை விரித்தும் போட்டு அதிகாலையில் துணியை பிழிந்து எடுத்த நீரை கண்ணாடி குப்பியில் விட்டு வைக்க புளிப்பேரி காடியாகும். இதுவே கடலை காடி எனப்படும். கடலையை நீரில் அரைத்து வடிகட்டி 100 முதல் 200 மில்லி அளவாக குடித்து வர உடல் பலம் மிகும். வாந்தியை போக்கும்