August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கொண்டை கடலை

கொண்டை கடலை ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். இதில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் இலை, விதை, சமூலம் மருத்துவ குணம் உடையது. குளிர்ச்சி உண்டாக்கும் தன்மை உள்ளது. விதை பித்தத்தை சமன்படுத்துதல், அதிக வெப்பம் அதிகரித்து நாடி, நடையை அதிகரித்தல், மலச்சிக்கல் தீர்த்தல் குணம் உடையது. வறுத்த கடலை சிறுநீர் பெருகும். இலைச்சாறு பசி தூண்டி மலமிளக்கும். கடலையை உணவுடன் மிகையாக பயன்படுத்த வயிற்று உப்பசம், நீர் வேட்கை, குடல் நோயுடன் கூடிய கழிச்சல் முதலியவை உண்டாக்கி வயிற்றில் காற்றை சேர்க்கும். நன் மருந்தை முறிக்கும். தேவையான அளவு கடலையை செம்மண் கரைத்த நீரில் ஓர் இரவு ஊற வைத்து காலையில் மென்று தின்று உடற்பயிற்சி செய்து வர உடல் பலம் மிகும். இலையை வேகவைத்து பொறுக்கக்கூடிய சூட்டில் வைத்து கட்ட அடிபட்ட வீக்கம், மூட்டு பிசகு ஆகியவை குணமாகும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love