May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கொப்பரை தேங்காய் விலை உயர்வுக்கான காரணங்கள்

தமிழகத்தில் கொப்பரை மற்றும் தேங்காய் உற்பத்தி சீசன் துவங்கிய நிலையில் ஒன்றிய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையான கிலோவுக்கு ரூ.105.90க்கு மாநில அரசு வேளாண் விற்பனைத்துறை வாயிலாக பல்வேறு ஒழுங்கு முறை விற்பனைகூடங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் நிலையங்கள் துவங்கினாலும் மார்க்கெட்டில் கொப்பரை விலை உயராமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது விலை கணிசமாக உயர்ந்து உள்ளது.

ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த காரணத்தால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தென்மாநிலங்களின் 80% எண்ணெய் இறக்குமதி உக்ரைன் நாட்டில் இருந்து தான். கடலை எண்ணெய், பாமாயில், சூரிய காந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் தற்போதைய விலையை விட கூடுதலாக உள்ளது. மற்ற எண்ணெய் விலை உயரவில்லை. சமையலுக்கு குறிப்பாக பலகாரங்கள் செய்ய பயன்படும் எண்ணெய விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதனாலே ஆயில் தேவை அதிகமாக உள்ளதால் தற்போதையை நிலையில் ஒடாத ஆயில் மில் மீண்டும் ஓடத் தொடங்கி விட்டன. எண்ணெய் வரத்து அதிகரித்த நிலையில் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்தோனேஷியா, அமெரிக்க நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையிலும் இந்த விலை உயர்வு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love