January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கொப்பரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை, ஏப்.22

வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று, கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் விலை உயர்ந்து காணப்பட்டதால் விவசாயிகள்

மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளச்சி வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள், 36 மூட்டைகளில் கொப்பரை கொண்டு வந்தனர்.

முதல் தர கொப்பரை, 19 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோ, ரூ.115.97 முதல் ரூ.120.97 விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 17 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோ, ரூ.98.69

முதல் ரூ.110.97 விலை நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய ஏலத்தில், 13 விவசாயிகள், ஆறு வியாபாரிகள் பங்கேற்றனர். கடந்த வாரத்தை காட்டிலும், 16 மூட்டை கொப்பரை வரத்து குறைவாக

இருந்தது. கொப்பரை கிலோவுக்கு, ரூ.3.82 அதிகரித்தது. ஏலத்தில், விலை உயர்வு ஏற்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Spread the love