கோவை, ஏப்.21
கொப்பரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தள்ளனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 420 மூட்டைகள் ஏலம்
விடப்பட்டதில் கிலோவுக்கு, ரூ.115.60 முதல் ரூ.128.40 விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 354 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, ரூ.78 முதல் ரூ.110.35 விலை நிர்ணயம்
செய்யப்பட்டது. மொத்தம், 774 கொப்பரை மூட்டைகளை, 128 விவசாயிகள் கொண்டு வந்தனர், எட்டு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்துடன் ஏலத்துடன் ஒப்பிடுகையில், இந்த
வாரம் கொப்பரை கிலோவுக்கு, ரூ.3.80 விலை உயர்ந்தது. நீண்ட நாட்களுக்குப்பின் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.