கோவை, ஏப்.28
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை அன்று, கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 420 மூட்டைகள் ஏலம்
விடப்பட்டதில், கிலோவுக்கு, ரூ.110 முதல் ரூ.120.55 வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 358 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, ரூ.74 முதல் ரூ.105 வரை விலை
நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம், 778 கொப்பரை மூட்டைகளை, 138 விவசாயிகள் கொண்டு வந்தனர். எட்டு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொப்பரை கிலோவுக்கு, ரூ.7.85 சரிந்தது. திடீரென விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து கண்காணிப்பாளர் கூறுகையில், தொடர்ந்து ஊரடங்கு ஏற்படும் என்ற அச்சத்தில், வியாபாரிகள் கொப்பரை கொள்முதல் செய்வதற்கே அச்சப்படுகின்றனர். மார்க்கெட்டில் தேங்காய்
எண்ணெய் விலை சரிந்து வருவதால், கொப்பரை விலையும் குறைந்துள்ளது, என்றனர்.