May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கொய்யாவில் மதிப்புக்கூட்டல்
வேளாண் மாணவிகள் கலந்துரையாடல்

மதுரை, மார்ச் 8

மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும்
மாணவிகள் அஸ்வினி பிரியதர்ஷனி, ஆவணி, பவதாரணி, பூமிகா, பிளஸிஸ் கிஃப்டா, சின்றல்லா ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒருபகுதியாக ஆதனூர் ஊராட்சியின் பொது சாவடியில் “கொய்யாவில் மதிப்புக்கூட்டல்” என்னும் தலைப்பில் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா செந்திலின் உதவியுடன் பொதுக்கூட்டம் நடத்தினர்.
அக்கூட்டத்தில் வேளாண் பிரச்னைகள் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடி கேட்டறிந்தனர்.

சமூக வரைபடம், சிக்கல் மரம், தர வரிசை வரைபடம் என ஊரக பங்கேற்பு மதிப்பீட்டின் கருவிகள் பலவற்றை அவ்வூர் மக்களை கொண்டு வீதிகளில் வரையச் செய்தனர். இச்செயல்பாட்டில் அவ்வூர் மக்களும் வேளாண் மாணவிகளுடன் ஆர்வத்தோடு இணைந்து செயலாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love