June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கொய்யாவில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம் அளித்த வேளாண் மாணவிகள்

மதுரை, ஏப்.1

மதுரை மாவட்டம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு, திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர். ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் ம.ரவ்மிதா, இரா.ரோஷில் பென்சுவீட்டி, ந.சங்கீதா, க.ர.சரண்யா, சா.சரண்யா, சீனு.சரண்யா, ர.சத்யா, செ.ஷர்மிளா, ப.வ.சிந்து, க.சினேகா, தி.சினேகா ஆகியோர் இப்பயணம் மேற்கொண்டனர். இன்று அவர்கள் மதுரையில் உள்ள வெள்ளியங்குன்றம் புதூர் கிராமத்தின் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் கொய்யாவில் கரும்படல நோயைக் கண்டறிந்தனர். இந்நோய்க்கு முக்கிய காரணமான மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த மைதா கொண்டு தெளிக்கும் முறையை கூறி செயல்முறை விளக்கமும் அளித்தனர்.

Spread the love