September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து ஆய்வுக் கூட்டம்

கடலூர், செப்.11

கடலூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுலாதுறை இயக்குநர் சந்தீப்நந்தூரி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் 12.09.2021 மாபெரும் கொரோனாதடுப்பூசி முகாம் நடத்துவதுகுறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தடுப்பூசி அடுத்த நிலைக்கு துரிதப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின் படிநாளை 12.09.2021 மாநிலம் முழுவதும் ஒரேநாளில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விடுபட்ட தகுதியானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 909 மையங்களில் அனைத்து பகுதிகளிலும் நடைபெற உள்ளது. தடுப்பூசி உயிர் கவசம் என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள தேர்தலில் பணி செய்வது போல பணியாற்றி இந்த மாபெரும் தடுப்பூசி முகாமினை நடத்தி, நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 1 லட்சத்து 70 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வகையில் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக நாளை 12.09.2021 காலை 7.00 மணி முதல் மாலை 7.00 வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் நடைபெறவுள்ளதை பொது மக்கள் அறியும் வண்ணமும் மற்றும் தடுப்பூசி போட்டு கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதை உணர்த்தும் வகையிலும் தண்டோரா மூலமாகவும், ஒலிபெருக்கி மூலமாகவும், வீடுவீடாக துண்டு பிரசுரங்களையும் வழங்கி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த மாபெரும் தடுப்பூசி முகாமினை மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து அனைத்து மையங்களிலும் பொதுமக்கள் வருகைக்கு ஏற்றாற் போல் தட்டுப்பாடின்றி தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Spread the love