January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கொரோனா தொற்றுக்கான மாத்திரை பைசர் நிறுவனத்துக்கு அமெரிக்கா அனுமதி

நியூயார்க், டிச.23

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மாத்திரைக்கு, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதியளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: 12 வயதிற்கு மேற்பட்டவர்களையும் நோய் பரவலில் இருந்து காப்பாற்றும் வகையில் அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை தயாரித்துள்ளது.

இந்த மாத்திரை கொரோனாவுக்கு எதிராக வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாத்திரையை உட்கொள்வதன் மூலம் மருத்துவமனைகளில் அனுமதியாவதை 90 சதம் வரை தடுக்கலாம் என்றும், மோசாமாக பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் இருக்கும் நோயாளிகளையும் மரணத்தில் இருந்து காப்பாற்றும் என்றும் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய ஆய்வில் ஒமிக்ரானுக்கு எதிராகவும் இந்த மாத்திரை சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அமெரிக்கா முழுவதும் உடனடியாக மாத்திரைகளை விநியோகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Spread the love