திருச்சி, மார்ச் 12
திருச்சி மாவட்டம் எஸ்.புதுக்கோட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் கொரோனா வைரஸ் பற்றியும் அதன் பாதுகாப்பு முறைகளையும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் கிரஷ்மா, வர்கீஸ், ஜோதிகா, நற்கண்ணி , ஷில்பா, சிவரஞ்சனி, சோபியா, சொர்ணா, ஸ்ரீமாலதி , சுபிக்ஷப்பிரியா, தட்சணா , யுவஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.
Spread the love