January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கொல்லிமலையில் விழித்தெழு சிறப்பு மருத்துவ முகாம்கள் 16 இடங்களில் நடைபெறவுள்ளன: ஆட்சியர் தகவல்

நாமக்கல், டிச.23

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் எளிதில் கிடைக்கவும் அவர்களின் உடல்நலனை காக்கும் மருத்துவ ஆலோசனைகளை முன்கூட்டியே தெரிவித்து மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்க கொல்லிமலை பகுதிகளில் 16 இடங்களில் அப்பகுதியை சுற்றியுள்ள குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்ளும் வகையில் நலம் காப்போம் கொல்லிமலை பழங்குடியினருக்கான விழித்தெழு சிறப்பு மருத்துவ முகாம்கள்” நடத்தப்படவுள்ளன.

இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் செயற்கை அவையங்கள் தேவைப்படுபவர்களுக்கு அளவெடுத்தல் மருத்துவ பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் பரிசோதனை கண் பரிசோதனை இருதய துடிப்பு பரிசோதனை (ஈ.சி.ஜி) கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மருத்துவ முகாம்கள் 28.12.2021 அன்று கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கிலும் 30.12.2021 அன்று பெரங்கரை நாடு ஒத்தக்கடையிலும் 04.01.2022 அன்று சேலூர் நாடு வெண்டலாப்பாடி பள்ளியிலும் 06.01.2022 அன்று சித்தூர் நாடு நரியங்காடு பள்ளியிலும் 11.01.2022 அன்று குண்டூர் நாடு நத்துக்குழிப்பட்டி பள்ளியிலும் 13.01.2022 அன்று ஆரியூர் நாடு சோளக்காடு பள்ளியிலும் 18.01.2022 அன்று ஆரியூர் நாடு கிழக்கு வளவு நடுநிலைப்பள்ளியிலும் 20.01.2022 அன்று ஆலந்தூர் நாடு பெரியமங்களம் பள்ளியிலும் 27.01.2022 அன்று குண்டனிநாடு குண்டனி கஸ்பா பள்ளியிலும் 01.02.2022 அன்று திருப்புளிநாடு மண்டபத்திலும் 03.02.2022 அன்று பைல்நாடு மேக்கனிக்காடு பள்ளியிலும் 08.02.2022 அன்று தின்னனூர்நாடு வாசலூர்பட்டி பள்ளியிலும் தின்னனூர்நாடு நடுவளவு பள்ளியிலும் 10.02.2022 அன்று வளப்ப10ர் நாடு யூத் ஹாஸ்டல் பகுதியிலும் 15.02.2022 அன்று எடப்புளி நாடு செங்கரை ஜி.ஆர்.டி.பள்ளியிலும் 17.02.2022 அன்று தேவனூர் நாடு பெரும்பரப்புப்பட்டி பள்ளியிலும் நடத்தப்படவுள்ளன.

Spread the love