August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கொவிட் -19 நெருக்கடிக்கு இடையிலும் கயிறு ஏற்றுமதி பெருமளவு அதிகரிப்பு

புது தில்லி, ஆக. 2

கொவிட்-19 பாதிப்பால் ஏற்பட்ட நெருக்கடிக்கு இடையேயும் இந்தியாவில் கயிறு பொருட்கள் ஏற்றுமதி 2021-22 காலக்கட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 12,34,855 மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.4,340.05 கோடியாகும். இதற்கு முந்தைய ஆண்டில் ரூ.3,778.98 கோடி அளவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியைவிட இது அதிகம் என கயிறு வாரியத்தின் தலைவர் டி குப்புராமு தெரிவித்துள்ளார்.

2021-22ஆம் ஆண்டில் கயிறு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம், பொருட்கள் அளவில் 6.2%-ம், மதிப்பு அளவில் 14.8%-ம் அதிகரித்துள்ளது.
தென்னை நார், பின்னப்பட்ட விரிப்புகள், கயிறு இழை, கைத்தறி விரிப்புகள், தென்னை நார் இழை, விசைத்தறி விரிப்புகள், கயிறு விரிப்புகள் & தரை விரிப்புகள், கயிறு வடம், சுருள் கயிறு மற்றும் இதர கயிறுப் பொருட்கள் உற்பத்தி, அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் அதிகரித்துள்ளன.
தென்னை நார் ஏற்றுமதி மட்டும் ரூ.2,259.18 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியிருப்பதுடன் நாட்டின் மொத்த கயிறு பொருட்கள் ஏற்றுமதியில் 52.05% அளவுக்கு உள்ளது.
இரண்டாவதாக பின்னப்பட்ட விரிப்புகள் மூலம் மட்டும் ரூ.1,001.15 (23.06%) கோடி அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.
கயிறு இழை ரூ.636.56 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த ஏற்றுமதியில் 14.66% ஆகும்.
கயிறு பொருட்களின் மொத்த ஏற்றுமதியில் 46% தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
கொச்சி மற்றும் சென்னை துறைமுகங்களிலிருந்தும் கணிசமான அளவுக்கு கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
2021-22-ல் 103 நாடுகள் இந்தியாவிலிருந்து கயிறு மற்றும் கயிறு பொருட்களை இறக்குமதி செய்துள்ளன.
அமெரிக்காவுக்குத்தான் அதிக அளவாக 17% கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக சீனா , இந்தியாவிலிருந்து அதிக அளவு கயிறு பொருட்களை இறக்குமதி செய்கிறது.
நெதர்லாந்து, தென்கொரியா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனி மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவிலிருந்து கணிசமான அளவுக்கு கயிறு மற்றும் கயிறு பொருட்களை இறக்குமதி செய்கின்றன.

மத்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதியாளர்கள், கயிறு வாரியம் ஆகியவை இணைந்து செயல்பட்டதால் தான் இந்த சாதனையை அடைய முடிந்துள்ளதாக கூறியுள்ள கயிறு வாரியத் தலைவர் டி குப்புராமு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த ஏற்றுமதியை ரூ.7,000 கோடி அளவுக்கு உயர்த்துவதே தமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love