May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோடை உழவின் அவசியம்

கோடை மழையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளத்தினை அதிகரிக்கும் வகையில் கோடை உழவு செய்திடலாம். பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் நடைபெறும் மழை கோடை மழை எனப்படும். இதனை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்வது மிகவும் சிறந்தது. கோடையில் மேல் மண் அதிகம் வெப்பமடையும், அந்த வெப்பம் கீழே சென்றால் மண்ணில் உள்ள நீர் ஆவியாகும். இதனை தவிர்த்திட மேல் மண்ணை உழுது ஒரு புழுதி படலத்தை ஏற்படுத்தி விட்டால் மண்ணில் உள்ள நீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது.

கோடை உழவின் நன்மைகள் :
மண்ணின் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது.
மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது.
மண் அரிப்பினை தடுக்கிறது.
மண் பொலபொலப்பாகிறது.
பூச்சிகளின் கூண்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றது.
களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
மண்ணின் அங்கக சத்து அதிகரிக்கிறது.
மண்ணில் நுண்ணுயிர்கள் செயல்பாடு அதிகரிக்கிறது.
மழைநீர் கீழே வழிந்து விடாமல் மண்ணிற்குள் செல்வதால் நிலத்தடி நீர்
உயர்கிறது.

எனவே விவசாயிகள் கோடை உழவு செய்து பயனடையுமாறு நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், ஆர்.சுதா தெரிவித்துள்ளார்.

Spread the love