விவசாயிகள் கோடைக் காலத்தில் செய்ய வேண்டிய முக்கிய பணி கோடை உழவு ஆகும். அதன் பயன்கள் குறித்து விருதுநகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லீமாரோஸ் விவரிக்கிறார்.
கோடை உழவு செய்வதால் படைப்புழு, சிகப்பு கம்பளிப்புழு போன்ற பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் மண்ணின் ஆழத்தில் இருந்து மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு வெயிலில் காய்ந்து அழிக்கப்பட்டு விடும். மேலும் மண் பொலபொலவென்று மேம்படுத்தப்பட்டு நீர் நன்கு உறிஞ்சி தன்னிடத்தே தக்க வைத்து கொள்ளும். ஆழத்தில் உள்ள களை விதைகளும் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அழித்து விடலாம். மேலும் கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு உழவு செய்யவும். இதன் மூலம் மக்காச்சோளப் பயிரினை தாக்கும் படைப்புழுவினை கட்டுப்படுத்தலாம் என விருதுநகர் வேளாண்மை உதவி இயக்குநர் லீமாரோஸ் கூறுகிறார்.
Spread the love