August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோடை உழவு அவசியம்

தஞ்சாவூர், ஏப்.25

விவசாயிகள் கோடை உழவு செய்யவேண்டும் என விதைச்சான்று உதவி இயக்குனர் முகமது பரூக் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

தமிழகத்தில் ஒரு ஆண்டில் மழை அளவான 960 மில்லி மீட்டரில் 8-ல் ஒரு பங்கு மழை கோடைகாலத்தில் பெய்கிறது. ஆகவே இந்த மழையை விவசாயிகள் வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாகுபடிக்கு பிறகு தரிசாக உள்ள நிலப்பகுதி கடினமாக இருக்கும். இந்த நிலத்தை கோடைகாலத்தில் பெய்யும் மழையை பயன்படுத்தி நன்கு உழவு செய்தால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொல பொலவென ஆகிவிடும். இதனால் மண்ணுக்குள் காற்றோட்டமும், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

நோய் மற்றும் பூச்சிகளை பரப்பும் காரணியான களைச்செடிகள் அளிக்கப்பட்டு மண்ணில் மக்கி உரம் ஆகிவிடுவதால் களைகளின் தாக்குதல் கணிசமாக குறைந்துவிடும். இது தவிர மண்ணுக்குள் இருக்கும் பூச்சிகள் கூட்டுப்புழுக்கள் நிலத்தின் மேலே கொண்டுவரப்பட்டு பறவைக்கு உணவாகிறது. மேலும் நீர் ஊடுருவிச் செல்வதற்கான தன்மை அதிகரிக்கிறது. டிராக்டர் மூலம் உழும்போது 5 கொத்து கலப்பை மூலம் உழுவது சிறப்பாக அமையும். இதனால் அடுத்த பருவத்திற்கு பயிர் சாகுபடி செய்வது மிகவும் எளிதாகிறது. நெல் அறுவடைக்கு பின் தேங்கியுள்ள தாள்களில் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யும். கோடை உழவு செய்வதால் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக உள்ளதால் அளிக்கப்பட்டு மக்கி பயிருக்கு உரமாகி விடுகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால் நில வளத்தை பெருக்கி பாதுகாக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறினார்.

Spread the love