January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோடை உழவு செய்து மழை நீரை சேமித்திடலாம் வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

சிவகங்கை, மே 20

கோடை உழவு செய்து மழை நீரை சேமித்திட கல்லல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சு.அழகுராஐா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டார விவசாயிகள், தற்பொழுது பெய்து வரும் கோடை மழையினை பயன்படுத்தி, தங்களது நிலங்களில் கோடை உழவு செய்து மழை நீரை சேமித்துடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ‘கோடை கால உழுதல்” என்பது வெப்பமான கோடை காலத்தில் சாய்வின் குறுக்கே உழவு செய்வதாக வரையறுக்கப்படுகிறது. கோடை மழையின் ஈரத்தைப் பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால் அதிக நன்மைகள் கிடைக்கும். முதல் மற்றும் முக்கிய நன்மை என்னவென்றால், மண்ணின் கடினமான மேல் புற அடுக்கை உடைத்து, ஆழமாக உழவு செய்வதால் ஊடுருவல் திறன் மற்றும் மண்ணின் ஊடுருவல் அதிகரிக்கும். இது ஈரப்பதத்தின் பாதுகாப்பை அதிகரிக்கிறது. இதன் விளைவாக தாவர வேர்கள் குறைந்த முயற்சியால் அதிக ஈரப்பதத்தைப் பெறும் கோடை உழவு செய்வால் மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இதனால் மண்ணில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண் வளம் பெருகும்.

குறிப்பாக வயலில் உள்ள களைகள், கோரை மற்றும் இதர களைகள் கோடை உழவு செய்வதினால் மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில கோடை உழவு செய்வது முக்கிய தொழில் நுhட்பமாகும். கோடை உழவு செய்வதினால் நிலத்தடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள், வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது. இதனால் வரும் பருவத்தில் பூச்சி நோய்த் தாக்குதல் பெருமளவு குறைகிறது. வயல்வெளிகளில் பெய்யும் மழை நீரை சேமிப்பதில் கோடை உழவு முக்கிய பங்கு வகுக்கிறது.

கோடை உழவினை சரிவின் குறுக்கே உழும்பொழுது மண் அரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யாத நிலத்தில் நீர் வேகமாக வழிந்தோடி மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு பல நன்மைகள் கோடை உழவினால் ஏற்படுவதால் ‘கோடை உழவு கோடி நன்மை ” எனக் கூறப்படுகிறது.

எனவே, கல்லல் வட்டார விவசாயிகள் தற்பொழுது பெய்து வரும் கோடை மழையினை பயன்படுத்தி தங்களது நிலங்களில் கோடை உழவு செய்து மழை நீரை சேமித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Spread the love