June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோடை நெல் சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்க விதைப் பரிசோதனை செய்வீர்

திண்டுக்கல், மே 17

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கோடை நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற விதைப் பரிசோதனை அவசியம் என மதுரை விதைப்பரிசோதனை அலுவலர் ம.மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தரமான விதைகளின் குணாதிசயங்களான நல்ல முளைப்புத்திறன், கலப்பு இல்லாமை, தூய்மை மற்றும் பூச்சி நோய் தாக்கம் இல்லாத விதைகளாக தேர்ந்தெடுத்து விதைத்தல் அவசியமாகும். விதைப்பரிசோதனை செய்து தரமான, அதிக முளைப்புத் திறனுடைய விதைகளை விதைப்பதன் மூலம்; வயலில் தகுந்த பயிர் எண்ணிக்கையை பராமரித்து உயர் விளைச்சலைப் பெறலாம்.

நடப்பாண்டில் கோடை நெல் சாகுபடிக்கு உகந்த நெல் ரகங்களான ஏடிடி-37, ஏடிடி-43, ஏடிடி(ஆர்)-45, ஏஎஸ்டி-16 மற்றும் கோ-51 ஆகிய ரகங்களில் தரமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் இன்றியமையாததாகும். நெற்பயிருக்க குறைந்தபட்சம் 80 சதவீத முளைப்புத்திறன் இருக்க வேண்டும். ஈரப்பதம் அதிகபட்சமாக 13 சதவீதம் இருக்க வேண்டும். விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தங்கள் வசம் உள்ள விதை ரகங்களில் 100 கிராம் என்ற அளவில் மாதிரிகள் எடுத்து, விதை மாதிரிகளுடன் தங்கள் பெயர், இருப்பிட முகவரி மற்றும் பகுப்பாய்வு கட்டணமாக ரூ.80/- உடன் திண்டுக்கல் உழவர் மைய வளாகத்தில் இயங்கிவரும் விதைப்பரிசோதனை நிலையத்தில் செலுத்தி விதைகளின் தரத்தினை பகுப்பாய்வு மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதனால் விதைக்கான செலவைக் குறைத்துக் கொள்வதுடன் அதிக மகசூலை பெற்று பயனடையலாம் என அவர் கூறியுள்ளார்.

Spread the love