திருப்பூர், மே 3
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் வட்டாரத்தில் சமீபத்தில் பெய்த கோடை மழை கால்நடை வளர்ப்பவர்களுக்கு உதவிகரமாக அமைந்தது. இயற்கையாக வளரும் கொழுக்கட்டை, அருகு, கோரை உள்ளிட்ட புல் வகைகள் நன்றாக வளர துவங்கியுள்ளன.
வைகாசி மாதம் வரை கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், கோடைக்கால தீவன பற்றாக்குறை நீங்கும் சூழ்நிலை உள்ளது. அடர் தீவனங்களுக்காக செலவழிக்கும் தொகையும் கணிசமாக குறையும். இது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love