January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோத்ரெஜ் கன்ஸ்யூமர் நிறுவனம் ரூ.366 கோடி நிகர லாபம் ஈட்டியது

புத தில்லி, மே 13
முன்னணி எஃப்எம்சிஜி துறையைச் சேர்ந்த கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் மார்ச் காலாண்டில் ஒட்டுமொத்த நிகரலாபமாக ரூ.365.84 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

2021 ஜனவரி-மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் இந் நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.2,705.69 கோடியாக இருந்தது. இது, 2020 இதே காலகட்டத்தில் விற்பனையான ரூ.2,132.69 கோடியுடன் ஒப்பிடுகையில் 26.87 சதம் அதிகமாகும். மேலும், நிகர லாபம் ரூ.229.20 கோடியிலிருந்து 59 சதம் வளர்ச்சி கண்டு ரூ.365.84 கோடியானது.

தொடர்ச்சியாக மூன்றாவது காலாண்டாக நிறுவனம் இரட்டை இலக்க விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 27 சதம் வளர்ச்சி கண்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 21 சத வளர்ச்சியை பெற்றிருந்தது. மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினம் ரூ.1,791.93 கோடியிலிருந்து 26.07 சதம் உயர்ந்து ரூ.2,259.12 கோடியைத் தொட்டுள்ளது.

கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2020-21 முழு நிதியாண்டில் நிகர லாபம் ரூ.1,496.58 கோடியிலிருந்து 14.98 சதம் உயர்ந்து ரூ.1,720.82 கோடியாகவும், நிகர வருவாய் 11.29 சதம் அதிகரித்து ரூ.10,936.01 கோடியாகவும் இருந்தது. 2019-20 நிதியாண்டில் வருவாய் ரூ.9,826.51 கோடியாக இருந்தது என பங்குச் சந்தையிடம் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love