May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோபால்ட் எடிஷன் ஸ்மார்ட்வாட்ச் ஒன்பிளஸ் சர்ப்ரைஸ் அறிமுகம்

ஸ்பெஷல் எடிசன் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை சர்ப்ரைஸாக சீனாவில் அறிமுகம் செய்திருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

இந்தியாவில் ஒன்பிளஸ் சாதனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த ஸ்பெஷல் எடிசன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஒன்பிளஸ் 9 சீர்ஸ் மாடல்களுடன் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஒன்பிளஸ் வாட்ச் கிளாசிக் எடிஷன் மட்டுமே விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஒன்பிளஸ் வாட்ச் மாடலின் மற்றொரு வேரியண்ட் கோபால்ட் எடிஷன் எனும் பெயரில் அறிமுகமாகி உள்ளது. புதிய டிசைனைப் பெற்றுள்ள இந்த வாட்சின் விலை கிளாசிக் எடிஷன் விலையைக் காட்டிலும் அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய மாடலில் சபையர் கிளாஸ் கவர், கோபால்ட் அலாய் பிரேம், 316L ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் வட்ட வடிவ டயல் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடன் லெதர் மற்றும் புளுரோ ரப்பர் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டுள்ளது. வேறு மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை

கோபால்ட் எடிஷன் விலையானது இந்திய மதிப்பில் ரூ.18,250-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் எச்டி அமோஎல்இடி டிஸ்ப்ளே உடன் 454×454 பிக்சல் துல்லியம் மற்றும் 2.5டி வளைந்த கிளாஸ் அமைப்பைக் கொண்டுள்ளது.

நோட்டிபிகேஷன், அழைப்புகள், மியூசிக், புகைப்படங்களை எடுப்பது போன்ற அம்சங்கள் உள்ளன.

அத்துடன் 4ஜிபி மெமரி உள்ளது. ப்ளூடூத் இயர்பட்ஸ் கனெக்டிவிட்டி வசதியும் உள்ளது. ஒன்பிளஸ் டிவிக்கு இந்த ஸ்மார்ட் வாட்ச் ரிமோட் ஆக செயல்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர 5ATM+IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியைப் பெற்றுள்ளது. மேலும், இதைக் கொண்டு 110-க்கும் அதிகமான உடற்பயிற்சிகளை செய்ய முடியும்.

இந்த சாதனத்தில் 402 எம்ஏஎச் பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இடம்பெற்றுள்ளது. இது இரண்டு வாரங்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப்பை தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 5 நிமிடங்களில் ஒரு நாளைக்கு தேவையான பேக்கப்பிற்கும், 20 நமிடங்களில் ஒரு வாரத்திற்கு தேவையான பேக்கப்பிற்கும் சார்ஜ் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love