June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோயம்பேடில் காய்கறிகள் விலை மலிவு

சென்னை, ஏப்.24

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை மலிவாக இருந்தாலும், ஊரடங்கை காரணம் காட்டி, வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மஹாராஷ்டிரா, ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு

உள்ளிட்டவையும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல வகை காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதில் தளர்வுகள் இருப்பதால், எவ்வித பிரச்னையுமின்றி, கோயம்பேடிற்கு காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. கோடைக் காலமாக இருந்தாலும்,

வரத்து போதுமான அளவில் இருப்பதால், காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. கோடையில், நீர் தன்மையுள்ள காய்கறிகளின் விலை உயர்வது வழக்கம். கரோனா பரவலை அடுத்து,

நீர் தன்மையுள்ள காய்கறிகளுக்கு மாற்றாக நார் சத்துள்ள காய்கறிகளை, பொதுமக்கள் சாப்பிடத் துவங்கியுள்ளனர். இதனால், நீர் தன்மையுள்ள காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஆனால்,

கோயம்பேடில் காய்கறிகள் விலை குறைந்தாலும், அவற்றை வாங்கிச் செல்லும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள், கரோனா ஊரடங்கு கெடுபிடிகளை

காரணம் காட்டி, கூடுதல் விலையில் விற்பனை செய்கின்றனர். இந்தக் கடைகளில் சில்லரை விலையில், ஒரு கிலோ காய்கறி, 40 முதல், 60 ரூபாய் வரை, அதிக விலை வைத்து விற்பனை

செய்யப்பட்டு வருகிறது. எனவே, வெளி மார்க்கெட்டுகளில் விலை உயர்வை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

Spread the love