சென்னை, ஜூன் 2
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை 60 வாகனங்களில் இருந்து 900 டன் தக்காளி வந்துள்ளது. இதனால் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.30க்கும், பெங்களூரூ தக்காளி ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் மற்ற காய்கறிகள் விலையும் குறைந்துள்ளது.
இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளின் தலைவர் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ தக்காளி 30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை எட்டியதை கண்டு இல்லதரசிகள் கடும் கவலை அடைந்தனர்.
தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், இல்லதரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். சுங்கச் சாவடி கட்டணத்தை குறைத்தால் தக்காளியின் விலை மேலும் குறையும். ஆன்லைன் மூலமாக காய்கறிகள் வாங்குவதை மக்கள் முற்றிலும் தவிர்த்தால் தக்காளியின் விலை மேலும் குறையும். இவ்வாறு கூறினார்.
Spread the love