January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோயில் அர்ச்சகர்ககள், பட்டாச்சாரியார்களுக்கு புத்தாடைகள்: அமைச்சர்கள் வழங்கினர்

விருதுநகர், ஜன.10

விருதுநகர் அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயிலில் மாவட்டத்திலுள்ள பல்வேறு திருக்கோயில் அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / ஓதுவார்கள் / பூசாரிகளுக்கு புத்தாடைகளையும் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகளையும் என 59 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்கள் வழங்கினார். பின்னர் அமைச்சர் பெருமக்கள் தெரிவித்ததாவது:

திருக்கோயில்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் திருக்கோயிலுக்கு வருகைபுரியும் பக்தர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் அர்ச்சகர்ஃபட்டாச்சாரியார்ஃபூசாரிகளுக்கு மயில்கண் பார்டர் பருத்தி வேட்டியும். பெண் பூசாரி மற்றும் திருக்கோயிலில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும் ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு (டீசழறஐ) நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணியும் வழங்கப்படுகிறது.

அதனப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருவில்லிபுத்தூர் நாச்சியார் ஆண்டாள் திருக்கோயில், மடவார்குளம் வைத்தியநாத சுவாமி திருக்கோயில், சிவகாசி விஸ்வநாதசுவாமி திருக்கோயில், சாத்தூர் வெங்கடாச்சலபதி திருக்கோயில், அருப்புக்கோட்டை சொக்கநாதசுவாமி திருக்கோயில், விருதுநகர் சொக்கநாதசுவாமி திருக்கோயில், திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோயில், வத்திராயிருப்பு காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயில், காளையார் குறிச்சி கூடமுடைய அய்யனார் திருக்கோயில், திருத்தங்கல் கருநெல்லிநாதசுவாமி திருக்கோயில், அருள்மிகு நின்ற நாராயணபெருமாள் திருக்கோயில், சிவகாசி வெங்கடாச்சலபதி திருக்கோயில், சிவகாசி கருப்பசாமி திருக்கோயில், சாத்தூர் வட்டம் மடம் சின்ன ஓடைப்பட்டி வன்னி விநாயகர் திருக்கோயில், மூவரை வென்றான் வழிவிடுமுருகன் திருக்கோயில் ஆகிய 16 திருக்கோயில்களை சேர்ந்த 27 அர்ச்சர்கள் மற்றும் 32 பணியாளர்கள் என மொத்தம் 59 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

Spread the love