October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி விநியோகம் அதிகரிப்பு

புது தில்லி, அக்.12

மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவற்றுக்கான நிலக்கரி விநியோகத்தை அதிகரித்துள்ளதாக கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோல் இந்தியா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு அக்டோபர் மாதத்தில் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நாயளான்றுக்கு சராசரியாக 14.3 லட்சம் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந் நிலையில், பண்டிகை காலத்தையயாட்டி மின் தேவை அதிகரிக்கும் என்பதால் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலக்கரி விநியோகம் கடந்த சில நாள்களில் 15.10 லட்சம் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அவற்றை கொண்டு செல்வதற்கான போதுமான கட்டமைப்புகளையும் உருவாக்கி வருவதாக கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love