மக்கும் குப்பையை பயன்படுத்தி கருப்பு படையான் ஈ என்று சொல்லப்படும் பி எஸ் எஃப் புழு மூலம் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். அதை பண்ணையில் வளர்க்கும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவாகவும் தாவரங்களுக்கு உரமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒருவரது பண்ணையில் தீவனச்செலவு 40% வரை குறைந்துள்ளதாக சொல்கிறார்கள். கால்நடை தீவன செலவையும் பயிர்களுக்கான உரச் செலவையும் குறைக்க தீவிர ஆராய்ச்சியினால் பி எஸ் எஃப் புழு பற்றி தெரியவந்துள்ளது. அதை நம் நாட்டு தட்பவெட்ப நிலைக்கு எப்படி உற்பத்தி செய்வது என்று பல ஆராய்ச்சிகள் செய்து வெற்றி பெற்றுள்ளனர். இந்த புழு மக்கும் குப்பையை உணவாக எடுத்துக் கொண்டு வாழக் கூடிய உயிரினம் தனது உடம்பில் 40% புரதமும் 30% கொழுப்பாகவும் கொண்டது பி எஸ் எஃப் புழு. இதனால் கால்நடைகளின் தீவனமாகவும் தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களாகவும் பி எஸ் எஃப் புழு திகழ்கிறது.
பிளாக் சோல்ஜர் ஃப்ளை ஒரு வகை ஈ இனம் இது மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதமான தீங்கும் விளைவிக்காது. உலக நாடுகளில் அதிக அளவு பி எஸ் எஃப் புழுக்களை தான் கால்நடை தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். இன்று இந்தியாவிலும் கருப்பு படையான் புழு உற்பத்தி வெகுவாக வளர்ந்து வருகிறது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தையும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. போதுமான தட்பவெட்பம் இருந்தால் வருடம் முழுவதும் இதை உற்பத்தி செய்யலாம். பொதுவாக மக்கும் குப்பையை உயர்வாயுவாகவும் எரு உரமாகவும் மாற்றுகிறோம். அதுபோல பி எஸ் எஃப் புழுவை வளர்த்து மக்கும் குப்பையை புரதச் சத்தும் கொழுப்புச் சத்துமாக மாற்றமுடியும். இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உரம் தயாரிப்பது இன்றைய தேதிக்கு உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கின்ற ஒரு விஷயம். ஒரு கிலோ சோயா பீன்ஸ் தயாரிக்க 7000 லிட்டர் விர்ச்சுவல் வாட்டர் என்கிற மறை நீர் தேவைப்படும். ஆனால் பி எஸ் எஃப் புழு உற்பத்தி செய்ய 700 லிட்டர் இருந்தால் புரதம் தயாரிக்க போதுமானது. தீவனத்தில் சேர்க்கும் கருவிகளை விட இதில் அதிக புரதம் மற்றும் அமினோ அமிலம் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். எனவே விவசாயத்தில் பி எஸ் எஃப் புழுவை நேரடியாகவும் மதிப்புக்கூட்டியும் பயன்படுத்தலாம். பி எஸ் எஃப் புழுக்களின் கூட்டு புழுக்களிலிருந்து கிடைக்கும் கைட்டின் என்ற மூலப்பொருள் கிடைக்கும். இது மருத்துவத் துறையிலும் அழகு சார்ந்த துறையிலும் அதிக பங்கு வகிக்கிறது. பி எஸ் எஃப் புழுக்கள் மூலம் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து 6:5:3 என்ற சதவீதத்தில் கிடைக்குது. அதனால் இதை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். முட்டை, புழு, புரத பவுடர் வறுத்த புழு என பல வகையில் லாபம் ஈட்டக்கூடிய ஒன்று.
இந்த பிளாக் சோல்ஜர் புழுவில் 12 பெரும் கம்பெனிகள் அதிக அளவு உற்பத்தி செய்கிறார்கள். இப்போது அகில இந்திய ப்ளாக் சோல்ஜர் புழு விவசாயிகள் அசோசியேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பிளாக் சொல்ஜர் புழு வளர்க்கும் விவசாயிகள் மற்றும் தனியார் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். பி எஸ் எஃப் பயன்படுத்துவது மூலமாக விவசாயிகள் கால்நடை மீன் வளர்ப்பில் குறைந்த செலவில் அதிக வருமானம் ஈட்டமுடியும். பி எஸ் எஃப் மொத்தம் 4 நிலைகள் இருக்கிறது. முட்டை புழு, கூட்டுப்புழு, பூச்சி. இதில் இரண்டாவது நிலையான புழு தான் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பூச்சி முட்டை இட்டவுடன் இறந்துவிடும், அதை வாத்து, கோழிகள் விரும்பி சாப்பிடும். கூட்டுப் புழுவிலிருந்து தான் கைட்டின் எடுக்கப்படுகிறது. முட்டையை உற்பத்திக்கு மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தலாம்.
பி எஸ் எஃப் எல் ஐ லவ் கேஜ் என்ற பிரத்தியேக முறையின் மூலம் வளர்த்து அதிலிருந்து முட்டையை பெறலாம். முட்டையை பொரிக்க வைத்து ஐந்து நாள்கள் புழுவாக வளர்க்க வேண்டும். பிறகு மக்கும் குப்பையில் சரிவிகித அளவில் ஐந்து நாள்கள் புழுக்களை இட்டு 15 நாட்கள் வளர்க்க வேண்டும். இந்த முறைகள் மூலம் 40 முதல் 45 சதவீதம் புரதமாகவும் 32 முதல் 35 சதவீதம் கொழுப்பும் பெறலாம்.
பொரித்த புழு 15 நாள்களில் மக்கும் குப்பையை உண்டு, புரதச் சத்தாக மாற்றுகிறது. இந்த புழு 21 முதல் 28 நாள்களில் ஈ யாக மாறும். ஈ ஆக மாறிய பிறகு மீண்டும் அதுவே முட்டை போட ஆரம்பித்துவிடும். ஒரு பி எஸ் எஃப் எல் ஈ 500 முதல் 800 முட்டைகளை வெளியிடும். முட்டையிட்ட அந்த ஈ 24 முதல் 48 மணி நேரத்துக்குள் இறந்துவிடும். முட்டைகளில் 75% பொரிக்கும் திறன் இருக்கும் இப்படி சுழற்சி முறையில் உற்பத்தி செய்யலாம் என்று கூறப்படுகிறது.
பி எஸ் எப் எல் மூலம் வருமானம்
பி எஸ் எப் எல் முட்டை, புழு, உலர்ந்த புழு, வறுத்த புழு அதன் அறவை, எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்யலாம். ஒரு மாசத்துக்கு ஒரு டன் முதல் ஒன்றரை டன் பி எஸ் எஃப் எல் உற்பத்தி செய்யலாம். மெக்சிகோ, வளைகுடா நாடுகள், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு பி எஸ் எஃப் எல் புழுக்களை ஏற்றுமதி செய்யலாம். பூச்சி முட்டை இட்டதும் குறிப்பிட்ட நேரத்தில் இறந்து விடும். அதனால் அதை ஏற்றுமதி செய்வது சிரமம். கழிவை உரமாக பயன்படுத்தலாம். பூச்சி முட்டை இட்ட தொகுப்பு ஒரு கிராம் 1,000 முதல் 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு கிராம் முட்டை தொகுப்பில் 40 ஆயிரம் முட்டைகள் இருக்கும், அதில் 70 முதல் 80 சதவீதம் பொறிக்கப்பட கூடியது. முட்டையை மட்டும் விற்பனை செய்தால் இதன் மூலம் ஒரு மாசத்துக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் எடுக்கலாம்.
லவ் கேஜ் என்றால் என்ன?
பி எஸ் எஃப் எல் புழு பூச்சியாக மாறி இனப்பெருக்கம் செய்து முட்டையிடும் அதற்கான இடமாக இந்த லங்கேஜ் பயன்படுகிறது. இதன் மூலமா வருஷம் முழுக்க அதிக முட்டைகளை பெறலாம்.
கால்நடை தீவனம்?
இந்தப் புழுவை நேரடியாக தீவனமாக பயன்படுத்தலாம். விற்பனை வாய்ப்புக்காக கால்நடை தீவனமாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம். இந்த புளு 40% மக்காச்சோளம் 30% குருணை 10% சோயா 10 % பருத்தி அல்லது தேங்காய் பிண்ணாக்கு 8% மினரல் மிக்ஸர் 2% சதவிகிதம் கலந்து கொடுக்கலாம். இதை ஒரு மாதம் வரை சேமித்து பயன்படுத்த முடியும். வேதிப்பொருள்கள் சேர்ந்தால் கூடுதலாகவும் பயன்படுத்தலாம். கோழிக்கு உணவாய் கொடுப்பதுபோல், பன்றி, நாய் என ஒவ்வொரு உயிரினத்திற்கும் பி எஸ் எஃப் புழு உணவுக் கலவை மற்றும் அளவீடு மாறும்.
பி எஸ் எஃப் புழு உரமாக பயன்படுத்துவது எப்படி?