மதுரை, ஜூன் 23
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி சாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் இன்று 24ந் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு, வரும் 27ந் தேதி வெள்ளாடு வளர்ப்பு மற்றும் 29ந் தேதி கறவைமாடு வளர்ப்பு பற்றிய இலவசப்பயிற்சிகள் நடைபெற உள்ளது. இதில் ஆர்வமுள்ள கால்நடை விவசாயிகள், சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் பயிற்சி பற்றிய முழுவிவரங்களை நேரிலோ அல்லது 0452-2483903, 88254 05260 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
Spread the love