May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவாக்சினை உற்பத்தியை ஆண்டுக்கு 70 கோடியாக அதிகரிக்க பாரத் பயோடெக் முடிவு

புது தில்லி, ஏப்.21

இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு தேவை ஏற்பட்டுள்ளதால், ஆண்டுக்கு உற்பத்தியை 70 கோடியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பாரத் பயோடெக் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹைதராபாத், பெங்களூரில் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளைத் தயாரிக்க பிரத்யேகமான பிஎஸ்எஸ்-3 தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துகிறோம் என்றும், இதன் மூலம் தடுப்பூசி தயாரிப்பு, பரிசோதனை, சுத்தமான தொற்று தடுப்பூசிகளை உருவாக்க உதவும் என தெரிவித்துள்ளது. மேலும், உயர் பாதுகாப்பான தடுப்பூசிகளைத் தயாரிக்க கூடுதல் செலவானாலும், லாபம் குறைவாகவே கிடைக்கும்.

அது மட்டுமல்லாமல், கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை ஆண்டுக்கு 70 கோடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கோவாக்ஸின் தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் தற்போது இந்தியன் இம்யுனாலஜிகல்ஸ் நிறுவனத்துடன் பாரத் பயோடெக் கூட்டு சேர்ந்துள்ளது. பிற நாடுகளுடன் சேர்ந்து வர்த்தக ரீதியிலான தடுப்பூசிகளைத் தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Spread the love