June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவாக்சின் தடுப்பூசிக்கு 78 சதம் செயல்திறன் பாரத்பயோடெக் தகவல்

புதுடெல்லி:

கோவிட் தொற்றுக்கு எதிராக ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவாக்சின் தடுப்பூசி, கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது.

இதற்கு மத்தியில் இந்த தடுப்பூசியின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையும் நடந்து வந்தது. இந்த தடுப்பூசி லேசானது முதல் கடுமையானது வரையிலான கோவிட் தொற்றுக்கு எதிராக 78 சத செயல்திறனைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களுக்கு தொற்றுநோயால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிற வாய்ப்பு 100 சதம் குறைவு எனவும் தெரிய வந்துள்ளது.

இதையயாட்டி பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில், கோவிட் 2ம் அலை எழுச்சி பெற்ற நிலையில், அறிகுறிகளுடன் கூடிய 127 பேர் பதிவு செய்யப்பட்டனர். அதில் லேசான, மிதமான, கடுமையான கோவிட்டுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 78 சதம் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love