June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவாக்ஸின் தடுப்பூசி பயன்பாட்டு காலத்தை அதிகரிக்க டிசிஜிஐயிடம் பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை

புது தில்லி, ஏப்.26

கோவாக்ஸின் தடுப்பூசியின் பயன்பாட்டு காலத்தை 24 மாதங்களாக அதிகரிக்க அனுமதி அளிக்குமாறு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் கோவாக்ஸின், கோவிUல்ட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ர´யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளபோதிலும், அத்தடுப்பூசி இன்னும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை.

இந்நிலையில், கோவாக்ஸின் தடுப்பூசியின் பயன்பாட்டு காலத்தை 24 மாதங்களாக அதிகரிப்பதற்கு அனுமதி அளிக்குமாறு அதைத் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. தற்போது வரை கோவாக்ஸின் தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்´யஸ் வெப்பநிலையில் சேமித்து வைத்து, 6 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

அதே வெப்பநிலையில் சேமித்து வைத்து 24 மாதங்கள் வரை பயன்படுத்துவதற்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் பாரத் பயயாடெக் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. அதற்கான மருத்துவ ஆய்வு ஆவணங்களையும் அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கோவிUல்ட் தடுப்பூசியின் பயன்பாட்டு காலத்தை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக அதிகரிப்பதற்கு டிசிஜிஐ கடந்த பிப்ரவரியில் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love