May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிசீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு மூலப்பொருட்களை வழங்க அமெரிக்கா முடிவு

புது தில்லி, ஏப்.26

கோவிட் தொற்று தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள், உடனடியாக இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் கோவிட் தொற்று இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையலி, தடுப்பூசி, மருந்து உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. அந்தத் தடையை நீக்கி, மூலப்பொருட்களை அனுப்பி வைக்க, மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. முதலில் அதை, அமெரிக்கா ஏற்கவில்லை. இந்நிலையில், தடையை தளர்த்தி, இந்தியாவுக்கு மூலப் பொருட்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொடர்புகொண்டு பேசிய, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோவிUல்ட் தடுப்பூசியை இந்தியா உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை அமெரிக்கா உடனடியாக இந்தியாவுக்கு அனுப்ப உள்ளது.

மேலும், சிகிச்சைகள், சோதனைகளுக்கு தேவையான உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா உடனடியாக வழங்கும். மேலும், அவசரநிலை அடிப்படையில், இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளை வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love